No Title

Friday, February 25, 2005

இன்று ரசித்தது

மழை
நதி
விதை...
விழுவதால் எழுபவை இவை.
நீ மட்டும் ஏன்
விழுந்த இடத்தில்
உனக்கு நீயே
கல்லறை கட்டுகிறாய்?

---

நீ
வெற்றிபெற்றதாய் நினைக்கும்
பல இடங்களில்
தோல்விதான் அடைந்திருப்பாய்...
நீ
தோற்றுப் போனதாய் நினைக்கும்
பல தருணங்களில்
வெற்றிதான் பெற்றிருப்பாய்...
உணர்ந்துகொள்
நீ தோல்வியடைந்தது வாழ்க்கையிலில்லை
புரிதலில்.

---

காட்டாறு கரைபுரண்டு வருகிறதா
நாணலாய் மாறு
புயல்க்காற்று புறப்படுகிறதா
புல்லாய் மாறு..
தொட்டாச்சிணுங்கியாய் இருப்பதும்
பச்சோந்தியாய் மாறுவதும் கூட
மனிதநேயத்தை
நீ
மறுதலிக்காதவரை தவறில்லைதான்.

4 Comments:

Post a Comment

<< Home


Google
 
Web ekanth.blogspot.com