No Title

Sunday, January 30, 2005

எழுதுவது பற்றி...

தமிழில் ஒரு வலைப்பூ வரைய ஆசை. இதோ கீழே ஒரு சிறு கருத்து. எனது சீனியர் ஹரிஹரனுக்கு எழுதிய மின்னஞ்ஞலில் இருந்து ஒரு பகுதி

"ஒரு விஷயம் சமீபத்தில் தோன்றியது.. சிறிது அது பற்றி யோசிக்கவும் செய்தேன்.. நாம் எழுதுகிறோம், சரி.. அதை எப்பொழுது மற்றவர் படிப்பார்கள்?. அதாவது இது எப்படி என்றால், நாம் படிக்க சொல்லாமலேயே அவர்களாகவே தேடிச் சென்று நமது எழுத்துக்களை படிப்பது எப்பொழுது நடக்கும்? நாம் சொல்லும் விஷயம் அவர்களுக்கு பரீட்ச்சயமான விஷயமாக இருக்க வேண்டும்.. ஆனால் நம் point of view வித்தியாசமாக இருக்க வேண்டும்.. மற்றவர்களால் யோசித்திருக்கப் படாத ஒரு கோணத்தில் அந்த சராசரி விஷயத்தை நாம் சொல்ல வேண்டும்.. அப்பொழுது தான் அது தானாக மற்றவர்களை நம் எழுத்தின்பாற் ஈர்க்கும்.. ஒப்புக்கொள்வாய் என நம்புகிறேன்"

ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

நன்றி: எ-கலப்பை, சுரதா

1 Comments:

  • என் எண்ணம்: மன நிறைவிற்காக எழுதும் போது மட்டும்.


    அவர்களாகவே படிப்பது நடக்கவேண்டுமென்றால் தொடர்ந்து எழுத வேண்டும், எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். அவர்களுக்கு பிடிக்குமா பிடிக்காதா என்று எண்ணுவதை நிறுத்திவிட்டு, நமக்கு பிடித்ததை, நாம் விரும்பும் வடிவில் வரைதல் வேண்டும். அந்த புரிதல் வந்துவிட்டால் எண்ணவோட்டங்களை படிப்பவர்களைவிட்டுவிட்டு படிக்கபடுவதில் செலுத்தலாம். ஒரு முறை படித்து பார்த்தால் நாமே விரும்பும்படி இருக்க வேண்டும். மனநிறைவு இல்லையெனின் நூறுவரி எழுதியிருந்தாலும் கிழிக்கலாம். நம் எழுத்துக்கள் நம் எண்ணங்களின் வடிவமாக இருக்கவேண்டும். சரியான சொற்கள் கிடைக்கவில்லையென்றால் தேடி சேர்க்க வேண்டும், சோம்பி விட்டுவிடுதல் கூடாது. கோர்வையாக வரவில்லையெனின் மறுபடி எழுத வேண்டும். பழகிய விடயமாக இருக்கவேண்டுமென்பது கிடையாது. புதிய விடயங்களையும் சொல்லலாம், சொல்லும் விதமெல்லாம் அவரவர் நடையை பொருத்தது, நுகர்ச்சியில் அது கண்டிப்பாய் மேம்படும். ஒரு விடயத்தை நாம் பார்க்கும் விதம் எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும் அதே கோணத்தில் சொல்லப்படும் விதம் எளிதாக இருந்தால்தான் இனிக்கும். வாசகனை ஈர்க்க எழுதப்படும் விடயமளவு சொல்லப்படும் விதமும்(சொற்களும் கோர்வையும்) இன்றியமையாதது. இதில் பாதிக்கு மேல் மிகவும் சிரமம். பாதி நேரங்களில் படிப்பவர்களை பற்றிதான் எண்ணுவோம், எழுதிவிட்டு பின்னூட்டங்களுக்கு ஏங்குவோம். ஆனாலும் எழுத வேண்டும், எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்.

    By Blogger ச.முத்துகுமார் (Muthukumar.S), at Friday, February 04, 2005 1:13:00 AM  

Post a Comment

<< Home


Google
 
Web ekanth.blogspot.com